திருமண நாள் என்று சொன்னாலே, பலருக்கும் உற்சாகமும், ஆனந்தமும் மனதினுள் வந்து விடும். என்னதான் கணவன் மனைவிக்குள் சில ஊடல்கள் இருந்தாலும், அதுவும் வாழ்க்கையை சுவாரசியமாக்குகின்றது என்று தான் சொல்ல வேண்டும்.
உங்கள் நண்பர்கள், உடன் பிறந்தவர்கள் மற்றும் பெற்றோர்க்கு நீங்கள் அழகாய் ஒரு வாழ்த்து சொல்ல நினைத்தால், இங்கே உங்களுக்காக இந்த திருமண நாள் வாழ்த்து கவிதைகளும், சுவாரசியமான வரிகளின்(wedding anniversary wishes) தொகுப்புகளும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றோம்.
இங்கே உங்களுக்காக அழகான திருமண நாள் வாழ்த்து தொகுப்பு.
ADVERTISEMENT1. இருவர் கொண்ட பந்தம்
நற்குடும்பமென உருவெடுத்த பொன்நாள்
வேற்றுமை களைந்த
இல்லற வெற்றி போற்றும் திருநாள்
வாழ்க்கை பழகும் சிறியோர்க்கு
உம் வாழ்வும் பாடமென உணர்த்தும் பெருநாள்
தடைகள் பல எதிர்கொண்டு
மறை போற்றி கரை கண்ட இந்நாள்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
2. உம் மண நாள்
உம் நீண்ட ஆயுள் எம் மகிழ்ச்சி
உன் பிறப்பில் தான் கண்டுகொண்டேன்…
கவிதைக்கும் உயிருண்டென
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
3. மலர்மாலை சூடி மகிழ்வோடு வாழ்க
மாங்கல்ய பந்தம் மாலையிட்ட உறவு மகத்தானது
அது மகிழ்வோடு துணையானது
அழகான வாழ்க்கை அன்பான உலகம்
அறிவோடும் அன்போடும் ஆண்டாண்டு வாழ்ந்திடுக
வாழக்கிடைத்த பயன் நான் மட்டும் வாழ்வதல்ல
நாம் வாழ நான் வாழ சுற்றமே வாழ வேண்டும்
இவ்வுண்மை புரிதல் வேண்டும்
நீவீர் சிரித்து இன் நிலத்தைச் சிரிக்கவைத்து
நீர் வாழும் வாழ்வை நினைத்துப் பார்க்கின்றேன்
இதுதான் வாழ்கை
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
4. வாழ்த்துக்கள் சொல்ல வார்த்தைகள் தேடி
வாசல்வரை வந்து நின்றேன்
நீங்கள் காதல் பேசி கவிகள் பேசி வார்த்தைகள் யாவற்றையும்
வசமாக்கி விட்டீரோ?
வார்த்தைப் பஞ்சத்திலே நான்
நீவீரோ மஞ்சத்திலே
வாழ்த்துக்கள் உங்களுக்கு வாழ்க பல்லாண்டு
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
5. வாழ்க்கை என்பது வளைவுகள் நிரம்பிய வசந்தப்பாதை
இன்பமும் இனிதே நிறைந்தது இன்பத்தில் இணைந்தே வாழ்க
தென்றலின் சாமரவீச்சில் திங்களின் ஒளி ஒத்தடத்தில்
மங்கள நாளில் மணமக்கள் மகிழ்வுடன் வாழ்க
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
6. சாத்திரங்கள் பழையன சரித்திரங்கள் பழையன
சமத்துவங்கள் என்பதே சத்தியமாய்ப் புதியன
பஞ்சாங்கம் பார்ப்பது பலபேரின் பழமொழி
நெஞ்சாங்கம் பார்ப்பதே அஞ்சாதோர் புதுவழி
குறையொன்றுமில்லை மணமகன் உன்னிடம்
வரையாத ஓவியம் இருக்குது பார் உன் இடம்
சிந்தாத முத்துக்கள் சேர்ந்திருக்கும் உன்மனம்மணமகளின் சொத்தென
சொல்வதிந்த திருமணம்
வாழ்க நிவிர் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
7. மலர்களில் மாலை கட்டும் வித்தையை
உன் கண்களுக்குச் சொல்லி வைத்த மணமகள் – எங்கள் மணமகனின் எண்ணங்களை மலர்களாக்கி, மாலைசூடி அணிந்துகொண்ட தென்று
வாழையடி வாழையாய் பூமலரும் சோலையாய்
நல்லதொரு வேளையில் புதுமனங்கள் சேர்ந்திட
தேவர்களும் வாழ்த்துவர் வானவரும் வாழ்த்துவர்
மண்ணிலுலகில் வாழ்ந்திடும் மாந்தர்களும் வாழ்த்துவர்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
8. இல்லறம் இனிது கண்டு இன்றுபோல் என்றும் வாழ்க
நல்லறம் நீங்கள் கண்டு நலமுடன் நாளும் வாழ்க
புண்ணியம் கோடிசெய்தோம் பிள்ளைகளாக வந்தீர்
பூமியில் நீங்கள் வாழ போற்றுவோம் இறைவன் பாதம்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
9. இறைவன் திருவருளால் இல்வாழ்க்கை இனிதாகட்டும்
சுற்றம் வாழ்த்துரைக்க சொந்தங்கள் பூச்சொரிய
இல்லறம் இனிதாகட்டும்இல்வாழ்க்கை வளமாகட்டும்
சொந்தமும் உறவுகளும் வாழ்த்துகிறோம்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
10. தென்றலின் சாமரவீச்சில் திங்களின் ஒளி ஒத்தடத்தில்
மங்கள தென்றலின் சாமரவீச்சில் திங்களின் ஒளி ஒத்தடத்தில்
மங்கள நாளில் மணமக்கள் மகிழ்வுடன் வாழ்க
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.
11. திருமண நாள் வாழ்த்து கூற வாழ்த்தலாம் வாங்க..
அற்புதமாய் ஓர் நாள்…. ஒரு கவிதையின் பிறந்த நாள்
இதயக் கண்ணாடி என்றென்றும் உறவின் வண்ணங்கள் தரும்
புன்னகை தருணங்கள் இது
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
12. நிலாவின் கைப்பற்றி நிறைவிழா காணும் மணமகனுக்கு வாழ்த்துக்கள்
தமிழன்னை மடியில் தவழ்ந்த மைந்தனை
தன்மடி தாங்கும் மணமகளுக்கும் வாழ்த்துக்கள்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
13. வாழ்த்துக்கள் உறவுகளே வாழ்த்துக்கள் உங்களிற்கு
எங்களது உள்ளம் இணைந்த இல்லம் என்றும் இனிக்கும் வெல்லம்
வானும் நிலவும் போல இணைந்து வாழ வேண்டும்
காலச்சுழற்சி கொள்ளும் நிலவு வானுள் கரைந்தும் வளரும்
இன்பம் மட்டும் கூட்டி இதய இராகம் மீட்டி எந்த நிலையின் போதும் மாறாஅன்பை மட்டும் ஊட்டி வாழ வேண்டும் நீங்கள்
வாழ்த்துகின்றோம் நாங்கள் தமிழின் சுவை போல குழந்தை செல்வத்துடன் குதுகுலமாய் வாழ வாழ்துகிறோம்
14. கல கல பேச்சு உண்டு
களங்கமில்லா தோற்றமுண்டு -தன்
பல கலைத் திறனினாலே -மணமக்கள்
நலிவடையா விளை நிலம் போலானார்
கன்னத்தில் பொலிவு தோன்றும்
கரும்பெனச் சிரிக்கும்போது -எல்லோரது
எண்ணங்களிலும் இனிமை தோன்றும்
வாழ்த்துவோம் மணமக்களை -இன்னுமோர்
நூறாண்டு காலம் வாழ்க வாழ்கவென்று…
நூறாண்டு காலம் வாழ்க வாழ்கவென்று…
15. உயர்ந்த நற்பண்புகளால் நெய்த உறவுப் பின்னல்கள்
அமைதியும், அன்பும் ஆன அளவிலா நேய இதயங்கள்…
இல்லாத தவத்தில் கேட்காத வரமாய், இணையும் ஸ்வரங்கள்…
மனிதம் பார்க்கும், மனங்களை மதிக்கும், இளைய மணஜோடிகளுக்கு…
எல்லாம் பெற்று ஏற்றத்துடன் வாழ எல்லையிலா ஆசிகள் என்றுமே…
இனிய திருமண நல் வாழ்த்துக்கள்
16. மழைத்துளி முத்தாய், மண்ணுக்குள் வைரமாய்,
புடம் போட்ட தங்கமாய்… ஒளி தாருங்கள்
இருவர் கண்கள் வரைந்த ஓவியம் அஜந்தாவாக…
மணமக்கள் தித்திப்பாலான கற்பக விருட்சமாக…
ஆகர்ஷிக்கும் வருண இழைகள் வாழ்த்தும்
ஆதர்ச ஜோடிகளாக…
காக்கும் இருவரையும் என்றும்
கடவுள் கரங்கள் நிலழாய் தொடர…
இனிய திருமண நல் வாழ்த்துக்கள்
17. வாழும் வாழ்க்கையை, புனிதமாய், புரிதலாய்,
மகிழ்வாய் வாழ்ந்து, மழலைகள் இணைய…
நிறைந்த, பூரணத்துவ மனதுடன் வாழ்த்துக்கள்
இனிய திருமண நல் வாழ்த்துக்கள்
18. வாழ்க்கைப் பயணத்தின் இனிய துவக்க விழா
துணையொடு கரமிணையும் வண்ணமிகு திருமண விழா
இணைபிரியா வாழ்க்கையிலே இன்பமே என்றும் கொள்வீர்
முடிச்சுப் போட்ட வாழ்க்கையிலே முடிவில்லா மகிழ்ச்சி காண்பீர்
செல்வங்கள் பதினாறும் குறைவின்றி நீவீர் பெறுவீர்
இனிய திருமண நல் வாழ்த்துக்கள்
19. ஏற்றமிகு வாழ்விவினை ஏந்தி வந்த நாட்களை,
கற்பனையின் கைக்கொண்டு கடந்து வந்த நாட்களை,
கூரைப் புடவையோடு கூட்டி வந்த நாட்களை,
நிலவோடு நீங்களூம் நீந்தி வந்த நாட்களை,
கண்முன் நிறுத்தி நினைத்துப் பார்க்கும் நாளான இத்திருமணநாளில்……..
வாழ்த்தி மகிழ்கிறேன்
இனிய திருமண நல் வாழ்த்துக்கள்
20. குறையாத அன்பும், புரிந்து கொள்ளும் நேசமும்,
விட்டு கொடுக்கும் பண்பும், கொண்டு பல்லாண்டு வாழ்க
கல்யாணம் என்பது ஒரு நாள்…. ஆனால் கல்யாண நாள் என்பது ஒவ்வொரு வருடமும்,……….
என் இனிய கல்யாண நாள் வாழ்த்துக்கள்
21. கவிதையாய் சொன்னால் காற்றில் போகும்
எப்படி சொல்ல என் வாழ்த்தை
சற்று வித்தியாசமாய் இறைவா என் ஆயுளில் பாதியை
என்னவனின் ஆயுளுடன் சேர்த்து விடு
என்று வேண்டி வாழ்த்துகிறேன்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
22. பிரபஞ்சத்திலேயே உங்கள் மனைவியை(பெயர்) எப்பொழுதும் மிகச் சரியாக புரிந்து வைத்திருக்கும்…
அவர்களின் உணர்வுகளை மதிக்கும் சிறந்த கணவனாக
என்றும் உயிர்த் தோழனாக இசையும் நாதமுமாய்
இதயமும் துடிப்புமாய் விழியும் காட்சியுமாய்
பார்வையும் பாசமுமாய் பதினாறும் பெற்று…
என்றும் மகிழ்ச்சியாய்… இன்று பிடித்த கரத்தை
வாழ்வின் எல்லா தருணங்களிலும் இறுக்கமாய் பற்றி…
தங்களின் திருமண பந்தம் என்னும் பெறுமதியை
ஏழேழு பிறவியும் தொடர வாழ்த்துகிறோம்…
இனிய திருமண நல் வாழ்த்துக்கள்
23. எப்போது ஒன்று சேர்வோம்? எப்படி ஒன்று சேர்வோம்?
இந்த ஏக்கங்கள் தவிப்புக்கள் இனிமேல் உமக்கு இல்லை
உணர்வுகளால் நேற்றுவரை உரையாடிய காதல் ஜோடி
இன்றிலிருந்து என்றென்றும் உடலாலும் இணைகிறது
என்ற இந்த திருமண நாள் நம்மை நினைவூட்ட
உள்ளத்தில் நீர் சுமந்த உண்மையான அன்பிற்காய்
திருவிழா செய்கின்றோம் அன்பு கணவனுக்கு
இனிய திருமண நல் வாழ்த்துக்கள்.
24. தாரமாய் வந்து தாயாய் மாறியவளே,
சிப்பிக்குள்ளே முத்தாய் சிதையாமல் காப்பவளே
அல்லும் பகலும் அயராது காப்பவளே
துன்பம் வரும் போதெல்லாம் துவலாமல் தாங்கி பிடிப்பவளே
அறுசுவை உணவு படைத்து அகம் மகிழ்பவளே
நும்பேச்சால் எம்மின் உள்ளத்தை நும்பால் வைத்துக் கொண்டவளே
வாழ்வின் பொருளானவளே,
என்னவளுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
25. அன்று ஒரு நாள் இதே நாளில் உன்னை கரம் பிடித்தேன்
கரம் பிடித்த இந்நன் நாளில் வரம் ஒன்றை வேண்டுகிறேன்
நீவீர நிறைந்த ஆயுளும் குன்றா நலமும் தேடிய அமைதியும்
தெவிட்டதாத நல் வாழ்வும் தெய்வப் பார்வையும் பெற்று
மலரும் மணமுமாய் தேனும் சுவையுமாய்
கண்ணும் காட்சியுமாய்மணக்கும் சந்தனமாய்
எம்முடன் பல திருமண நாள் காண வாழ்த்துகின்றேன்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
26. பிறைநிலவாய் வந்து இன்று முழு நிலவாய் என்னில் மலர்ந்திருக்கும் என்னவளே
என் “வாழ்வாய்” நீ வந்தமைக்கு உனக்கும் கூட நன்றிகள் கோடியடி பொன் நிலவே …
ஆம் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த “வரம்” …என
என்னை உணர வைத்த உன்னதமானவளே
உன் வரவால் வசந்தங்கள் சேர்ந்ததடி என் வாழ்வில்
இப்பிறவியல்ல …. எப்பிறவியாயினும் நீ எந்தன் ” வாழ்வாக ” வர வேண்டும்
இது போன்று திருமண நாள் இன்னும் கோடி வேண்டும்
என்னவளுக்கு, இனிய திருமண நல் வாழ்த்துக்கள்
27. கடல் கடந்து வந்த போதும் காதல் இன்னும் உள்ளதடி ….
காத்திருப்பாய் கண்மணியே ….நம் கைகள் சேரும் ….
நல்ல காலம் வரும் வெகுவிரைவில் …..
இனிய திருமண நாள் வாழ்த்துகளுடன் ….
உன் அன்பு கணவன் …..
28. தங்கள் கணவரின் எண்ணங்களையும் தேவைகளை கேட்காமலே
நிறைவேற்றும் தாயாக…
அவரோடு அன்பால் ஊடல் செய்யும் தோழியாக…
அவரை நன்கு புரிந்து வைத்திருக்கும் மனைவியாக…
அவரோடு விளையாடும் குழந்தையாக…
அவருக்கு உற்ற துணையாக…
வாழ்வின் ஒவ்வொரு நொடியும் பக்க பலமாக
தோள் கொடுத்து அவர் தோள் சாய்ந்து வாழும் தோழியாக…
அவரின் மனைவியாக எல்லா பிறவியும்
அவரின் பாதை முழுக்க அவர் கரம் பிடித்து பயணம் தொடர வாழ்த்துகிறோம்
இனிய திருமண நல் வாழ்த்துக்கள்
29. இணைந்தே இல்லறத்தின் இலக்கணம் வென்ற
இரு மனங்களின் இன்ப உலா இன்று
இங்கண் இதயம் மலர வாழ்த்துப் பூக்கள் அன்பு மனைவிக்கு
இனிய திருமண நல் வாழ்த்துக்கள்
30. சீரும் சிறப்பும் வளமுமாகி, நாளும் நலனில் உடலுமாகி
தேனில் நனைந்த பலாவாகி, வாழ்க்கை தெவிட்டா சுவையுமாகி
இவர்போல் வாழ்ந்தோர் எவருமிலாதவருமாகி
உறவும் ஊரும் போற்ற நற்பெயருமாகி
அனைவர்க்கும் உதாரண தம்பதியராகி வாழ வாழ்த்துகிறோம்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
31. திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றனவாம்……
இவர்களின் நிச்சயிக்கப்பட்டுவிட்ட சொர்க்கத்திற்கு,
திருமணநாள் நல்வாழ்த்துகள்…
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
32. வாழக்கிடைத்த பயன் நான் மட்டும் வாழ்வதல்ல
நாம் வாழ நான் வாழ சுற்றமே வாழ வேண்டும்
இவ்வுண்மை புரிதல் வேண்டும்
நீவீர் சிரித்து இன் நிலத்தைச் சிரிக்கவைத்து
நீர் வாழும் வாழ்வை நினைத்துப் பார்க்கின்றேன்
இதுதான் வாழ்கை
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
33. வருடங்கள் வருவதிலும் போவதிலும் என்ன பயன்?
செய்யும் செயல்களால்த் தான் செயல்கழுக்கும் பயன்
இன்னும் பல ஆண்டு இனிதாய் மலர்ந்திருக்கு
புதிதாய் பெரிதாய் நிறைவாய் உயர்வாய்
வாழ வாழ்த்துகிறேன்…
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
34. உணர்வினை மதித்து, உரிமைக்கு இடமளித்து
ஜயந்தெளிந்து அன்போடு வாழ்க
அகிலம் போற்ற இனிதாய் வாழ்ந்திடுக
மனம்போல மாங்கல்யம் மன்றத்தில் வாழ்த்துக்கள்
மழைபோல் பொழிய
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
35. வருடங்கள் வருவதிலும் போவதிலும் என்ன பயன்?
செய்யும் செயல்களால்த் தான் செயல்கழுக்கும் பயன்
இன்னும் பல ஆண்டு இனிதாய் மலர்ந்திருக்கு
புதிதாய் பெரிதாய் நிறைவாய் உயர்வாய்
வாழ வாழ்த்துகிறேன்…
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
36. வானும் நிலவும் போல இணைந்து வாழ வேண்டும்
காலச்சுழற்சி கொள்ளும் நிலவு வானுள் கரைந்தும் வளரும்
இன்பம் மட்டும் கூட்டி இதய இராகம் மீட்டி எந்த
நிலையின் போதும் மாறா அன்பை மட்டும் ஊட்டி
வாழ வேண்டும் நீங்கள் வாழ்த்துகின்றோம் நாங்கள்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
37. உங்கள் வாழ்க்கையில் திருமண பந்தம் என்னும் புது அஸ்திவாரம்
பிறக்கும் இந்த நாளிலே மாங்கல்ய பாக்கியம் தழைத்து
குடும்பம் விருத்தி பெற்று ஏனைய செல்வங்களும் நிறைந்து வளம் பெற
வேண்டி எல்லா வல்ல அந்த இறைவனை வணங்கி இந்த புதுமண தம்பதிகளை வாழ்த்துகிறேன்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
38. மலர்களில் மாலை கட்டும் வித்தையை உன் கண்களுக்குச் சொல்லி வைத்த மணமகள் –
எங்கள் மணமகனின் எண்ணங்களை மலர்களாக்கி மாலை சூடி அணிந்து கொண்டு வாழையடி வாழையாய் பூமலரும் சோலையாய்
நல்லதொரு வேளையில் புதுமனங்கள் சேர்ந்திடதேவர்களும் வாழ்த்துவர்
வானவரும் வாழ்த்துவர் மண்ணிலுலகில் வாழ்ந்திடும் மாந்தர்களும் வாழ்த்துவர்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
39. பூவினால் காய்கள் தோன்றும்
புலவனால் கவிதை தோன்றும்
நாவினால் சொற்கள் தோன்றும்
காதில் கூவிடும் குயில்களாய் நீங்களெல்லாம்
இனிதாய் கூவுங்கள் மணமக்களை வாழ்த்தியிங்கு
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
40. உணர்வினை மதித்து உரிமைக்கு இடமளித்து
ஜயந்தெளிந்து அன்போடு வாழ்க
அகிலம் போற்ற இனிதாய் வாழ்ந்திடுக
மனம்போல மாங்கல்யம் மன்றத்தில் வாழ்த்துக்கள்
மழைபோல் பொழிய மலர்மாலை சூடி மகிழ்வோடு வாழ்க
மாங்கல்ய பந்தம் மாலையிட்ட உறவு மகத்தானது – அது
மகிழ்வோடு துணையானது அழகான வாழ்க்கை
அன்பான உலகம் அறிவோடும் அன்போடும்
ஆண்டாண்டு வாழ்ந்திடுக என்றும் அன்புடன் வாழ்த்தும்
உங்கள் அன்பு குழந்தைகள்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
41. அன்பெனும் நதியினில் மேலும் கீழும் அலை அடிக்க
லாவகமாய் அனுசரித்து இருவரும் துடுப்பாகி
வாழ்க்கையெனும் படகை சில மைல் தாண்டி விட்ட
தம்பதியர் இருவருமாய் வெகுதூரம் பயணிக்க- இப்பயணம்
ஒரு முடிவில்லா இன்பப் பயணமாக மாற – என் வாழ்த்துக்கள்
இனிய திருமண நல் வாழ்த்துக்கள்
42. வாழையாய் வம்சம் தழைக்கும், வளமுடன் வாழ்க்கை செழிக்கும்
கருத்தொருமித்த தம்பதியராய் சுற்றம் வியக்கும் வாழ்வை காண்பீர்
உதாரணத் தம்பதியராய் ஊர் போற்ற… உறவும் போற்ற…
இணைபிரியாத வாழ்வினிலே நூறாண்டு காலம் வாழ்ந்திடவே
உளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்….
இனிய திருமண நல் வாழ்த்துக்கள்
43. அழகான வாழ்க்கை அன்பான உலகம்
அறிவோடும் அன்போடும் ஆண்டாண்டு வாழ்ந்திடுக
என்றும் அன்புடன் வாழ்த்தும் உங்கள் பிள்ளைகள்
அப்பா அம்மாவுக்கு, இனிய திருமண நல் வாழ்த்துக்கள்
44. உதாரணத் தம்பதியராய் ஊர் போற்ற… உறவும் போற்ற…
இணைபிரியாத வாழ்வினிலே நூறாண்டு காலம் வாழ்ந்திடவே
உளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்….
எங்கள் பெற்றோர்களுக்கு, அன்பு பிள்ளைகளின்
இனிய திருமண நல் வாழ்த்துக்கள்
45. வந்திட்ட பொழுதுகளை வாசமாக்கி இல்லறத்தில் மகத்தான வாகை சூடி….
இந்த நிமிடத்தில் வாழ்வின் வெற்றியாளர்களாய் நிற்கின்ற
அம்மாவையும் அப்பாவையும் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றோம்
46. மூத்தவர் நீங்கள் அரண்களாய் இருந்து
இது போலே திருவிழா தினமும் கண்டு
ஒரு மனத்தோடு, இன்முகத்தோடு வாழ
உலகமுள்ளவரை வாழ்ந்திருக்க வேண்டுமென
அகம் மகிழ்ந்து அன்பாலே உண்மையான உள்ளத்தாலே வாழ்த்துகின்றோம்
வாழ்க நீவிர் பல்லாண்டு
47. எங்கள் வழிகாட்டியா நீங்கள்,
ஒன்றுக்குள் ஒன்றாகி உறவுக்கு விளக்கமாகி
அன்பென்னும் பந்தத்தில் அரும்பெரும் சுடராகி
பண்பென்னும் பகுப்பிலே பலமான விருட்சமாகி
வாழ்வின் இன்ப வளைவுகளை வசந்தத்தின் வாசலாக்கி
வாழ்க்கைத்துணையுடன் கை கோர்த்து,
மனம்போல் மகிழ்வோடும், அழகான மகவோடும்
வாழ்க்கையை உங்கள் வசமாக்கி வாழ வாழ்த்துகிறோம்
48. நீ பல்லாண்டு வாழ வேண்டும் என்று திருமண நாள் வாழ்த்து
பூக்களின் வித்து நீ… புன்னகையின் சொத்து நீ…
அவதாரம்பத்து நீ… பெண்களுக்கெல்லாம் முத்து நீ …
உலக அன்னையர்களுக்கு கொடுத்த தத்து நீ…
நீ என்னை தங்கையின் உறவில் பித்தாக்கிவிட்டாய்…
அதை நான் பூங்கொத்தாக்கிவிட்டேன்..
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
49. வெறும் சத்தங்களைத் தரும் அழைப்பேசியின் முத்தங்கள் வேண்டாம்…
எண்ணம் குழைத்த என் வார்த்தைகள் வாங்கிக்கொள் திருமண நாள் பரிசாக….
உன் திருமண நாளை பார்த்து மற்ற நாட்களெல்லாம் பொறாமை படுகின்றன
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
50. உணர்வினை மதித்து, உரிமைக்கு இடமளித்து
ஜயந்தெளிந்து அன்போடு வாழ்க
அகிலம் போற்ற இனிதாய் வாழ்ந்திடுக
மனம்போல மாங்கல்யம் மன்றத்தில் வாழ்த்துக்கள்
மழைபோல் பொழிய
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
51. ஆன்றோர் வாழ்த்துரைக்க, ஆயிரமாய் பூச்சொரிய
மங்கை திருமகளாய் மணவறையில் காத்திருக்க
நாதசுர மேளங்கள் நல்லதொரு வாழ்த்திசைக்க
நங்கை திருக்கழுத்தில் நம்பி அவன் நாண்பூட்ட
கட்டியவன் கட்டழகை கடைக்கண்கள் அளவெடுக்க
மெட்டியவன் பூட்டிவிட மெல்லியலாள் முகம் சிவக்க
இவள் பாதியிவன் பாதி என்றிணைந்திட்ட மணவாழ்வில்
இல்லறத்தின் இலக்கணமாய் இரு மனமும் வாழியவே
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
52. வாழ்த்திடுமே.. நீ வாழ்ந்திடவே.
மேகமென்னும் கூந்தலினை மின்னல் கீற்றால் தலை சீவி.
பனித்துளிகள் சிந்தும் பூக்களினால் மிதமாக அலங்கரித்து.
முகமென்னும் பால் நிலவாம் வானவில்லின் சாயம் பூசி,
வானம் கொண்ட நிறமதிலே.. அழகான சேலை நெய்து..
கட்டிய பெண் வந்தாள். கெட்டி மேளம் கொட்டிட தான்.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
53. விண்மீன்கள் புன்னகையால் புது கவிதைகள் பாடிடுமே.
பூங்காற்றும் தென்றலும் சேர இசை சாரல் தூவிடுமே.
மஞ்சள் வேர் தனிலே பொன் தாலியும் ஊஞ்சலாடிடுமே.
குங்குமமும் கன்னங்களில் அழகாய் சிவந்திடுமே.
சூரியனும்,சந்திரனும் தன் ஒளிகளால் வாழ்த்திடுமே.
கெட்டி மெளத்துடன்.. நாதமும் சேர்ந்து வாழ்த்திடுமே வாழ்த்திடுமே.
நீ வாழ்ந்திட வாழ்ந்திடவே.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
54. எத்தனை இன்பம் இந்த நிமிடத்திலே
கொட்டும் மழையும் பூவாய் பொழிய
அத்தனை தேவர்களும் ஒருங்கே வாழ்த்த
உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்வாய் அமைய வாழ்த்துகிறோம்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
55. இறைவன் வகுத்த பந்தத்தில் இருமனம் இணைந்து ஒருமனதாகி
திருமணமாகும் நல்ல திருநாளில் அன்புக்கு இனிய அக்கா, அத்தான் இருவருக்கும்
இனிய திருமண நல் வாழ்த்துக்கள்
56. சொர்க்கத்தின் வாசலில் சொந்தமே என் தங்கையே
உன் திருமணம் இன்று ……
அண்ணா என்று தினம் சொல்லும் தேவதையே
பூக்களின் புன்னகை சேகரித்து வாழ்த்துகிறேன் உன்னை
வாழ்க வளமுடன் வளர்க இருமன அன்பு வையகத்தில் என்றும் ….
வாயார புன்னகை செய்யும் இந்த பொழுதின் அர்த்தங்கள் உன்
அருகில் கவிபாடும் வாழ்த்துக்களாய் …
தங்கையே வாழ்த்துக்கள், எங்கள் தங்கமே வாழ்த்துகள்
57. திருமணம் என்பது பத்து பொருத்தங்கள் பார்த்து,
ஒன்பது நவக்கிரகங்கள் சாட்சியாக, எட்டு திசைகளிலும்..
ஏழுமலயானே என்று கூறி, அருஞ்சுவை உணவு படைத்து,
ஐம்பெரும் பூதங்கள் வாழ்த்த,
அறம் , பொருள் ,இன்பம் ,வீடு ஆகிய நான்கும் கிடைக்க,
மூன்று முடிச்சு போட, என் தங்கைக்கு
என் மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துக்கள்
58. எத்தனை இன்பம் இந்த நிமிடத்திலே
கொட்டும் மழையும் பூவாய் பொழிய
அத்தனை தேவர்களும் ஒருங்கே வாழ்த்த
உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்வாய் அமைய வாழ்த்துகிறோம்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
59. வாழ்ந்திட வாழ்ந்திடவே. விண்மீன்கள் புன்னகையால்
புது கவிதைகள் பாடிடுமே. பூங்காற்றும் தென்றலும் சேர
இசை சாரல் தூவிடுமே. மஞ்சள் வேர் தனிலே
பொன் தாலியும் ஊஞ்சலாடிடுமே. குங்குமமும் கன்னங்களில்
அழகாய் சிவந்திடுமே.
சூரியனும், சந்திரனும் தன் ஒளிகளால் வாழ்த்திடுமே.
கெட்டி மெளத்துடன்.. நாதமும் சேர்ந்து வாழ்த்திடுமே வாழ்த்திடுமே.
நீங்கள் வாழ்ந்திட வாழ்ந்திடவே.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
60. வேதங்கள் நான்கும் சொல்லும் வாழ்த்துக்கள் – உனக்கு
சொந்தங்கள் எல்லாமே வாழ்த்தட்டும் …
பந்தங்கள் எல்லாமே சேரட்டும் ஒன்றாய் ..
சொல்லட்டும் வாழ்த்துகள், வெல்லட்டும் உன் வாழ்வென்று ..
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வாழ ஆண்டவன் பாதங்களை
அர்ச்சிக்கிறேன் …வணங்குகிறேன்
இனிய திருமண நல் வாழ்த்துக்கள்
61. இரு உள்ளங்கள் இணையும் ஆரம்பம் திருமணம்
இணைந்த இரு கரம் அன்பினில் எழுதிய காவியம் இல்லறம்
தமிழ், தமிழ், தமிழென்று தொடர்ந்து சொல்லும் போது
அமிழ்து, அமிழ்து , அமிதென்று தானாய் வரும்
தமிழ் போல் என்றும் அமிழ்தாய் வாழ்ந்திட
இனிய திருமண நல் வாழ்த்துக்கள்
62. வாழ்த்துக்கள் உறவுகளே வாழ்த்துக்கள் உங்களிற்கு
வாழ்த்துக்கள் உறவுகளே வாழ்த்துக்கள் எங்களது
உள்ளம் இணைந்த இல்லம் என்றும் இனிக்கும் வெல்லம்
வானும் நிலவும் போல இணைந்து வாழ வேண்டும்
காலச்சுழற்சி கொள்ளும் நிலவு வானுள் கரைந்தும் வளரும்
இன்பம் மட்டும் கூட்டி இதய இராகம் மீட்டி எந்த
நிலையின் போதும் மாறா அன்பை மட்டும் ஊட்டி
வாழ வேண்டும் நீங்கள்
இனிய முதலாம் ஆண்டு திருமண நல் வாழ்த்துக்கள்
63. இரு உள்ளங்கள் இணையும் ஆரம்பம், திருமணம்
இணைந்த இரு கரம் அன்பினில் எழுதிய காவியம் இல்லறம்
வாழ்த்திடுமே.. நீ வாழ்ந்திடவே.
வாழ்த்துகிறோம் உங்கள் முதலாம் ஆண்டு திருமண நாளில்
இனிய திருமண நல் வாழ்த்துக்கள்
64. தமிழும் சுவையும் போல கவியும் இசையும் போல
குழந்தை செல்வத்துடன் குதுகுலமாய் வாழ வாழ்துகிறேன்
எத்தனை இன்பம் இந்த நிமிடத்திலே
கொட்டும் மழையும் பூவாய் பொழிய,
அத்தனை தேவர்களும்ஒருங்கே வாழ்த்த
உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்வாய் அமைய வாழ்த்துகிறோம்
இனிய முதலாம் ஆண்டு திருமண நல் வாழ்த்துக்கள்
65. இரு மனம் இணைந்து காதலும் நட்பும் கரை புரண்டோட
உணர்வுகள் பரிமாறிக்கொள்ள இல்லறத்தை பகிர்ந்துக்கொள்ள
உயிரும் உடலுமாய் ஓர் உயிராக பிணைந்திட
ஒருவர் நலனில் இன்னொருவரும் அக்கறை கொள்ள
ஒருவரின் உணர்வு இன்னொருவரின் மதிப்பாக(புரிதலாக) மாறிட
இருவரும் இணைந்து வாழ்க்கையின் அடையாளமான
மழலைச் செல்வங்களை ஈன்றிட
வாழத் தேவையான வளங்களை பெற்றிட வாழ்த்துகிறோம்
இனிய முதலாம் ஆண்டு திருமண நல் வாழ்த்துக்கள்
66. உணர்வினை மதித்து உரிமைக்கு இடமளித்து
ஜயந்தெளிந்து அன்போடு வாழ்க
அகிலம் போற்ற இனிதாய் வாழ்ந்திடுக
மனம்போல மாங்கல்யம் மன்றத்தில் வாழ்த்துக்கள்
மழைபோல் பொழிய மலர்மாலை சூடி மகிழ்வோடு வாழ்க
இனிய முதலாம் ஆண்டு திருமண நல் வாழ்த்துக்கள்
67. அழகான வாழ்க்கை அன்பான உலகம்
அறிவோடும் அன்போடும் ஆண்டாண்டு வாழ்ந்திடுக
வாழ்க்கைப் பயணத்தின் இனிய துவக்க விழா
துணையொடு கரமிணையும் வண்ணமிகு திருமண விழா
இத்திருநாளில், எங்கள் வாழ்த்துக்கள்
இனிய முதலாம் ஆண்டு திருமண நல் வாழ்த்துக்கள்
68. உணர்வினை மதித்து உரிமைக்கு இடமளித்து
ஜயந்தெளிந்து அன்போடு வாழ்க
அகிலம் போற்ற இனிதாய் வாழ்ந்திடுக
மனம்போல மாங்கல்யம் மன்றத்தில் வாழ்த்துக்கள்
மழைபோல் பொழிய மலர்மாலை சூடி மகிழ்வோடு வாழ்க
மாங்கல்ய பந்தம் மாலையிட்ட உறவு மகத்தானது – அது
மகிழ்வோடு துணையானது
அழகான வாழ்க்கை அன்பான உலகம்
அறிவோடும் அன்போடும் ஆண்டாண்டு வாழ்ந்திடுக
இனிய 25ஆம் ஆண்டு திருமண நல் வாழ்த்துக்கள்
69. கையோடு கை சேர்த்து இதயங்கள் இரண்டும் இணைந்து
மண விழா கண்டு மனதை மணத்தால் அரவணைத்து
25ஆம் ஆண்டு காணும் நீங்கள் நூறாண்டு காலம் வாழ்வை நோக்கி
ஊரார் வாழ்த்துகளோடு உலகமுள்ளவரை வாழ்த்திட வாழ்த்துகிறேன்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
70. அன்பென்ற ஊற்றிலே நனைந்திடும் உறவுகள்
ஆனந்த மழையிலே ஊற்றான இணைவுகள்
அனைத்து வாழ்வதில் அன்றில் பறவைகள்
ஆயிரம் காலங்கள் வாழ்திடும் உறவுகள்
சிரித்த முகத்துடையார் சிந்தித்து பேசிடுவார்
பன்புள்ள அன்பு உள்ளங்கள் பார்தாலே முகம் தனில்
சிரிப்பென்ற அகல் விளக்குகள்
இல்லறத்தில் இருபத்தைந்து இணைந்த வாழ்கை போல்
இனிவரும் காலமும் இணைந்து வாழ்கவென நல்லுறவே கொண்டு
வாழ்தி நிற்கிறோம்.
இனிய திருமண நல் வாழ்த்துக்கள்
71. பார்த்த முதல் நொடியில் மனம் ஒருமித்து, நன்மக்காள் இருவர் பெற்று முக்காலமும் அன்பு பாராட்டி
நால்விழிகளும் காதல் பேசி பஞ்சபூதங்கள் சாட்சியாக வாழ ஆரம்பித்து
25 வருடங்கள் இனிதே நிறைவடைந்தாலும், இறையருளோடு …..
ஆன்றோரும் சான்றோரும் வாழ்த்துரைக்க, மங்கள நாதங்கள் முழங்க
அக்கினி சாட்சியாய் என் மனங்கவர்ந்த ….. இனியவளின் மலர்க்கரம் பற்றி
மணவாழ்வில் இணைந்திட்டு இன்றோடு ஆகிறது 25 ஆண்டு
ஆம் யாருக்கும் கிட்டாத நல்வாழ்வு கிடைத்து இன்றோடு ஆகிறது 25 ஆண்டு .
72. முடிச்சுப் போட்ட வாழ்க்கையிலே முடிவில்லா மகிழ்ச்சி காண்பீர்
செல்வங்கள் பதினாறும் குறைவின்றி நீவீர் பெறுவீர்
வாழையாய் வம்சம் தழைக்கும் வளமுடன் வாழ்க்கை செழிக்கும்
கருத்தொருமித்த தம்பதியராய் சுற்றம் வியக்கும் வாழ்வை காண்பீர்
இனிய 25ஆம் ஆண்டு திருமண நல் வாழ்த்துக்கள்
73. இதயத்தின் உரசல்களில் உருவான ஒளித் தீப்பிழம்பு
விண்வெளியில் பயணித்து கண்மணிகள் கதைசொல்லும்
முத்தான காதல் செய்தமணமக்கள் ஓருயிராய் வாழ்க பல்லாண்டு
இனிய திருமண நல் வாழ்த்துக்கள்
74. திருமணத்தின் இன்பங்கள் திகட்டாது தொடர்ந்து வர
ஓருயிராய் ஆருயிராய் மணமக்கள் வாழியவே
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
75. வாழ்த்துக்கள் உறவுகளே வாழ்த்துக்கள் உங்களிற்கு
வாழ்த்துக்கள் உறவுகளே வாழ்த்துக்கள் எங்களது
உள்ளம் இணைந்த இல்லம் என்றும் இனிக்கும் வெல்லம்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
76. காதலும் கவிதையுமான சங்கமம்
நேசித்த மனங்கள் வாழ்வின் துவக்கம்
இனிய விடியலில் திருமண விழாக் கோலம்
இனி நாளும் வாழ்வே விழாக் காணும்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
77. புரிதலும் அறிதலும் ஒன்றாகி
அன்பும் காதலும் தினம் பெருகி
ஒருமித்த எண்ணத்தில் நறுமண வாழ்வாகி
உருவாகிடும் கவிதையே இந்த மன வாழ்க்கை
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
78. அன்பு மிகுந்து அக்கறை நயந்து பண்பில் கனிந்து
பாசத்தில் இணைந்து பாருலகம் வியந்து போற்றிப் புகழ்ந்திட
பல்லாண்டு வாழ்க . வாழ்கவே.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
79. கல கல பேச்சு உண்டு களங்கமில்லா தோற்றமுண்டு -தன்
பல கலைத் திறனினாலே –மணமக்கள் நலிவடையா விளை நிலம் போலானார்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
80. மனம்போல் வாழ்வு கண்டீர் மங்கள நாள் நிறைவு கொண்டீர்
மலர்தூவி வாழ்த்துகிறோம் மணமக்கள் நீவிர் வாழ்க
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
81. பலநூறு ஆண்டு காலம் பண்போடு நீங்கள் வாழ்க
பதினாறு வளங்கள் கண்டு பல்லாண்டு காலம் வாழ்க
எண்ணிய எண்ணம் யாவும் இன்று போல் நிறைவேறட்டும்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
82. தமிழும் சுவையும் போல
கவியும் இசையும் போல குழந்தை செல்வத்துடன்
குதுகுலமாய் வாழ வாழ்துகிறேன்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
83. இரு உள்ளங்கள் இணையும் ஆரம்பம் திருமணம்
இணைந்த இரு கரம் அன்பினில் எழுதிய காவியம் இல்லறம்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
84. வாழ்க்கையில் இன்பம் ஊற்றாகி ஆலம் விழுதாய் குலம் தழைத்தே
வளம் நலம் வாழ்வினில் வசமுமாகி வாழ்வாங்கு ஆயுளும் வாழ்ந்திடுவீர்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
85. நேசித்த இரு மனங்கள் திருமண விழாவில் இணையும் இந்த நன்னாளினில், பொன்னாளினில், இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களுடன்,
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
86. வாழ்க்கைப் பயணத்தின் இனிய துவக்க விழா
துணையொடு கரமிணையும் வண்ணமிகு திருமண விழா
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
87. இணைபிரியா வாழ்க்கையிலே, இன்பமே என்றும் கொள்வீர்
முடிச்சுப் போட்ட வாழ்க்கையிலே, முடிவில்லா மகிழ்ச்சி காண்பீர்
செல்வங்கள் பதினாறும் குறைவின்றி நீவீர் பெறுவீர்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
88. வாழையாய் வம்சம் தழைக்கும், வளமுடன் வாழ்க்கை செழிக்கும்
கருத்தொருமித்த தம்பதியராய் சுற்றம் வியக்கும் வாழ்வை காண்பீர்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
89. உதாரணத் தம்பதியராய் ஊர் போற்ற… உறவும் போற்ற…
இணைபிரியாத வாழ்வினிலே நூறாண்டு காலம் வாழ்ந்திடவே
உளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்….
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
90. இல்லறமெனும் இன்பச் சோலையிலே
இணைப் பறவைகளாய் மெல்லிசை பாடி
மணமன்றலில் கூடும் மணமக்களே..
நீவீர் நல்லறம் பேணி நலமுடன் வாழ்வீர்.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
91. சொல்லறம் பழகி சொர்க்கம் காண்பீர்
மனையறம் துலங்கி மாண்புடன் மகிழ்வீர்.
பேறுகள் பல பெற்று பெயர் நிலைக்க வாழ்வீர்.
இன்ப துன்பத்தில் இரண்டெனக் கலந்து ஒன்றென ஆவீர்.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
92. நாதஸ்வர மேளதாளங்கள் முழங்க
நற்றமிழாலும் அற்றமிழாலும் நல்லோர்கள் வாழ்த்த…..
பட்டாடை சரசரக்க, புது மெட்டி ஒலிக்க
நறுமலர்களால் கோர்க்கப்பட்ட மாலையை தோளில் ஏந்தி….
சந்தனக்களபமும் திலகமும் சூடி விழிகளில் விரவியஅழகிய விதிர்ப்புடனிருக்கும்
மணமகளுக்கு மங்கல நாணை மணமகன் சூட்ட….
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
93. பூச்சொரிதலாய் இனிய உணர்வுகளுடன்
தொடங்கும் இச்செந்தூரபந்தம் தொடரட்டும் என்றென்றும்
நாதஸ்வர மேளதாளங்கள் முழங்க
நற்றமிழாலும் அற்றமிழாலும் நல்லோர்கள் வாழ்த்த…..
பட்டாடை சரசரக்க, புது மெட்டி ஒலிக்க
நறுமலர்களால் கோர்க்கப்பட்ட மாலையை தோளில் ஏந்தி….
சந்தனக்களபமும் திலகமும் சூடி விழிகளில் விரவிய அழகிய விதிர்ப்புடனிருக்கும்
மணமகளுக்கு மங்கல நாணை மணமகன் சூட்ட….
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
94. வாழ்த்துக்கள் சொல்ல வார்த்தைகள் தேடி வாசல் வரை வந்து நின்றேன்
நீங்கள் காதல் பேசி கவிகள் பேசி வார்த்தைகள் யாவற்றையும் வசமாக்கி விட்டீரோ?
வார்த்தைப் பஞ்சத்திலே நான் நீவீரோ மஞ்சத்திலே
வாழ்த்துக்கள் உங்களுக்கு வாழ்க பல்லாண்டு நிலாவின் கைப்பற்றி திருமண விழா காணும் மணமக்களுக்கு வாழ்த்துக்கள்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
95. இன்று பூமியில் புதிதாய் பிறந்த பூக்களைக் கொண்டு வாழ்த்துகிறேன்.
வருடம் பல கடந்து வரங்கள் பல வாங்கி வாழ இந்த நண்பனின் பாசம் கலந்த வாழ்த்துக்கள்
காதல் சமுத்திரத்தை கடந்து சாதித்தவனே…வாழ்த்துக்கள்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
96. ஆயிரம் அல்லிக்குள் இரு தாமரையாய் மணமக்களின் வாகன ஊர்வலம்.
ஒருபக்க கவிதைக்குள் முதல் வரியாய் தங்க மலர்களின் ஒய்யார தோரணை.
புல் தரையில் காலை பனி துளியாய் காதலர்களின் மலர்ந்த முகம்.
ஆலயத்திற்குள் அலங்கார அணிவகுப்பு.
சுடர் ஏற்றப்பட்ட விளக்காய் இரு மனமும் ஒளிர்ந்தது.
சம்மதத்துடன் திருமண சடங்குகளும் நிறைவேறியது.
உறவுகள் கூடி பூத்தூவி பூந்தேரை தேடி ஏற்றி மணவிழா மேடைக்கு வழியனுப்பி வைத்தனர்.
இந்நாள் போன்று எந்நாளும் மகிழ்வோடு இணைந்து வாழ வாழ்த்துகிறோம்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்
97. பகலில் கதிரவனும், மதியும் ஒன்றாக கைகோர்த்தது போல,
ஆழ் கடல் முத்தும், வீழ் அருவியின் துளியும் ஓன்றாக சிரித்தது போல,
படரும் கொடியும் வருடும் தென்றலும் ஒன்றாக வருவது போல,
தம்பதிகள் கம்பீரமாகவே வந்தனர்
செவ்வாழை தோட்டம் வாழ்த்து பாட பூவான மின்னல் புது ஒளி வீச
கானகத்து குயில் குரல் இசை முழங்க என் மன கால்கள் ஆட்டம் போட
இனிதே இன்புற்றேன் அந்த இனிய நாளில்
98. இன்னும் எத்தனை காலம் உன்னுடன் உன்னில் கலைந்து கரைந்து
கிடக்கப் போகிறேன் என்பதறியேன்
ஆனால்உனை பிரிந்த இந்த சிறு இடைவெளி என் உன் இடையே இன்னும்
நெருக்கம் தருவது நிஜம்
இன்னும் சில காலம் நீயில்லாமல் நானும் நானில்லாமல் நீயும்
தனித்தனியே திருமண விழாவை கொண்டாடுவதால்
இன்னும் நெருக்கமாவோம் மனசால்
இனிய திருமண நல் வாழ்த்துக்கள்
99. இணைந்தது இதயங்கள்
ஊருக்கு அறிவித்து உறவுக்கு தெரிவித்து
வந்தோரை மகிழ்வித்து வெட்கத்தை விடுவித்து
அக்கினி முன்னின்று மந்திரம் என்னென்று தெரியாமல்
உடன் கூறி சாசனம் செய்தானாம் –
மங்கை இவள் இன்றோடு என்னவள் ஆகின்றாள்
அவன் எடுத்த உறுதி மொழி – அதுவே அவன் செல்லும் வழி
என்றவனுக்கு நினைவூட்டும் நாளாகும் – இது
ஆண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவாகும்.
இனிய திருமண நல் வாழ்த்துக்கள்
பட ஆதாரம் – Shutterstock
ADVERTISEMENTஅறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!
You Might Also Like